கடவுளையும்
மிஞ்சி விடுகிறாய்
காத்திருக்க வைத்து
காட்சி தராமலேயே
கடத்துவதில்
கடவுளையும்
மிஞ்சி விடுகிறாய்
காத்திருக்க வைத்து
காட்சி தராமலேயே
கடத்துவதில்
உலகின் அனைத்து
காத்திருப்புகளும் ஏதோ
ஒரு விடியலுக்காகதான்
நிறம் பார்த்து வந்த காதல்
நிரந்தரமானது அல்ல
மனம் பார்த்து வந்த காதலுக்கு
மரணமே இல்லை
தீண்டாத விருப்பங்கள்
சுடர்கொண்டிருக்கும்
ஆசையின் நெருப்பு போல
சந்திரன் கூட பொறாமைப்படும்
புன்னகை தான் என்னை ஈர்க்கிறது
நீ வா(சுவா)சிக்க
மட்டுமே
மலர்ந்தது இந்த
சிவப்பு ரோஜா
வெவ்வேறு வழிகளில்
அன்பை வெளிப்படுத்தலாம்
அதில் ஒருவழி தூரத்திலிருக்கும்
உன்னை இந்த செய்தியை
வாசிக்கச் செய்வது
காதலர் தின வாழ்த்துக்கள் என் அன்பே!
சில நிமிடம்
ரசித்தாலும்
மனதை வண்ணமாக்கி
செல்லும் வானவில்லாய்
நீயும் வண்ணமாக்குகிறாய்
மனதை
கடிகாரத்தினுள்
சுழலும் முள்ளைப்போல்
உன்னை சுற்றியே
என் நினைவுகளும்
நீ நினைக்க
மறந்தாலும்
உன் கண்கள்
நினைவூட்டும்
விழிகளுக்குள்
இருப்பது நானல்லவா