தூரத்தில் நீயிருந்தால்
துயரத்தில் துடிக்குது
மனம்
தூரத்தில் நீயிருந்தால்
துயரத்தில் துடிக்குது
மனம்
சாய்ந்து கொள்ளும்
இடமெல்லாம்
உன் தோளின் மென்மை
நினைவெல்லாம் நீயாகி
உன் மன கூண்டில்
சிறகடிக்க வேண்டும்
காதல் பறவையாக
நான் மட்டுமே
என்றும் என்னவனே
எனை எரித்தாலும்
அணைக்க விரும்பாத
அழகிய தீ
நீ...!
பார்வையின் நேர்த்தி
வார்த்தைகளை
தேவைப்படாமல் செய்கிறது
பூக்களுக்கும்
கொண்டாட்டம்
இவள்
கூந்தலில்
தஞ்சம்
கொண்டதால்
எத்தனை ஆயிரம்
மொழிகள் இருப்பினும்
மௌனம் மட்டும்
அழகாய் பேசுகிறது
பிடித்தவரிடத்தில்
அவளும் மௌனமானால்
நானும் மௌனமாய்கிறேன்
இருள் கூட
அழகாக தெரிகிறது
அவள் அருகில்
இருக்கும்போது
உனை எண்ணும்
நெஞ்சுக்கு உறக்கமில்லை
உனக்கான அழைப்பு
என்றும் முடிவதில்லை
இளைப்பாறும் நொடியிலும்
துணையாக
வந்து விடுகிறாய்
நான் மனம் சாய