கரையை துரத்தும்
அலையாய் கடல்
தாண்டிய போதும்
துரத்துகிறது
உன் நினைவலைகள்
காற்றாய்

பாரமாய் இருப்பதை விட
கொஞ்சம் தூரமாய்
இருப்பதே மேல்

நம்பிக்கை இல்லாத காதல்
காற்றில் பறக்கும்
ஒரு காகிதம் போல

திடீர் மழையாய்
நீயும் அவ்வப்போது
நனைக்கிறாய்
காதல் மழையில்
கன்னத்தை தீண்டி

ஓசை வேண்டாம்
பாஷை வேண்டாம்.
இப்படியே இருந்துவிடேன்
உன் விழி தீண்டலில்
கொண்டாடிட
ஓய்வுநாளை நானும்

உன் பார்வை
மட்டுமல்ல
நீ விட்டு
செல்லும்
பாத சுவடும்
ரசிக்க தூண்டுதே
என் மனதை

முடிவே இல்லாத காதலும்
பிரிவு இல்லாத வாழ்வும்
உன்னிடம் வேண்டும்
உன்னிடம் மட்டுமே வேண்டும்

நீரலையாய் தளும்பும்
உன் நினைவலைக்கு
சுதி சேர்கிறது
கொலுசொலியும்

நீ
கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்

உன் தேடல்
எதுவாகவும்
இருக்கட்டும்
என் தேடல்
நீயே