உன்னோடு உரையாட
சேர்த்து வைத்த
வார்த்தைகளை
எல்லாம் உளறி
நிலவோடு
ஒரு ஒத்திகை
நீ வரும்
வரை

மவுனமே
வாழ்க்கையான போதும்
அவளின் கொலுசு சத்தம்
இன்பமென என்னை
வாழச்செய்கிறது

ஒரு பார்வை
வாழ்க்கையை மாற்றும்
அந்த பார்வையை
மறக்க முடியவில்லை

விழிகள் உறங்கிட
மறுக்கும்
போதெல்லாம்
உறங்க வைக்கிறான்
முத்த சத்தத்தில்
தாலாட்டி

தூரம் இருந்தாலும்
விரல்கள் தேடும்
உணர்வுதான்
விலைமதிக்க முடியாதது

இதயம் இருப்பது
என்னமோ எனக்குள் தான்
ஆனால் அது துடிப்பது என்னமோ
உனக்காக மட்டும் தான்

உன் நினைவுகள்
எனக்கு இனிமையான
துன்பத்தை தருகிறது

நினைவுகள் கூட
நெஞ்சில் இடம் கேட்கும் போது தான்
அது காதல் எனும்

தொடு திரையிலும்
தொட்டிழுக்குறாய்
மனதை
காந்த பார்வையில்

மௌனத்தில் பேசும் மொழி
காதலின் அடையாளம்