💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
கண்ணோட்டம் நீண்டால்
இதயம் தானாக ஓர் கவிதை எழுதும்
content_copy
தூரம் பிரிக்கும் போது கூட
நினைவுகள் அருகிலிருப்பதே
காதலின் ஆழம்
content_copy
உன் அகிம்சையே
எனை தூண்டுகிறது
அராஜகமாய்
உனை காதலிக்க
என்னவனே
content_copy
விழி பேசும்
பாஷைகளை
மனம் அறிந்தாலும்
மொழி வரவில்லை
விடைகூற
உன் சுவாச
காற்றின் தீண்டலில்
content_copy
பனி விழும் இரவில் கூட
அவளது மூச்சின் சூடே
என்னை உருக்கிறது
content_copy
மழையில்
நனைவதும் பிடிக்கும்
குளிர் காய்வது
உன் பார்வை
வெப்பத்தில் என்றால்
content_copy
சில முகங்கள் மறக்கப்படாது
ஏனெனில் அவை
மனதில் பதிந்த கவிதைகள்
content_copy
ஆயிரமாயிரம் யுகம்
காத்திருப்பேன் நான்
உன்னை காணும்
ஓர் நொடிக்காக
content_copy
உன்னுலகம்
பெரிதாக இருக்கலாம்
ஆனால்
எனக்கான உலகம்
நீ மட்டுமே
content_copy
ஆழ்கடலில் வீழ்ந்திருந்தால்
மீண்டிருப்பேன்
வீழ்த்தி விட்டாய்
அன்பு கடலில்
சுகமான தந்தளிப்பில்
மீண்டிட மனமின்றி
நான்
💖 பக்கம் 107 / 478
arrow_back
arrow_forward
📋 Copied