எழுதியும் முற்றுப்
பெறாத ஓரே கவிதை
அவன் மட்டுமே

விழிகள்
காத்திருப்பதும்
உனக்காக....
கண்ணீரும்
உனக்காக

தொலைத்த
புன்னகையெனும்
முகவரியை
என்னவன்
தேடி கொடுத்தான்

சென்றபோதும் தங்கிவிட்டாய்
மனதில் வந்த
வழியை பார்த்து
ரசிக்கிறது விழியும்
மீண்டும் வருவாயென

பலருடனும் வார்த்தைகள்
பரிமாறி கொண்டாலும்
ஒரு நொடி
வந்து போகும்
உன் நினைவுக்கு
இணையில்லை
எதுவும்

வெற்றிடம் என்பதே
கிடையாது
நீ வேரூன்றி
போனதால் உள்ளத்திலும்

உன்னைத்தவிர வேறு என்ன
பெரிய வேண்டுதல் இருந்து விட
போகிறது எனக்கு.....

நொடிக்கொரு
சிந்தனை இருந்தும்
உன்னை நினைக்க
மறந்தது இல்லை நான்

உன் கண் சிமிட்டலில்
காணாமல் போன என்
இதயம் உன் சிரிப்பினால்
துடித்து கொண்டிருக்கிறது

பல மாயங்கள்
செய்கின்றாய்
விழிகளுக்குள்....
மாயக் கண்ணனாய்