கண்ணனின் தனிமைக்கு
குழல்போல்
என் தனிமையில்
இசைக்கிறது
புல்லாங்குழலாய்
உன் நினைவுகள்
மனதை மயக்கியே

அருகில் வந்தவுடன்
உயிர் கூட தளர்ந்து போகிறது
இதுவே ரொமாண்டிக் மயக்கம்

மனமோ
உன்னில் லயித்திருக்க
நீயோ சற்றும்
சலனமின்றி
இருக்கின்றாயே
கண்ணாய்
என் கண்ணா

தினமும் துயிலெழுந்து
உனக்காகவே
முகம் பார்க்கிறேன்
உன்னால் நான்
அழகுபெறுவதை
ரசிப்பதற்காக

நான் உன்னை மட்டும்
காதலிக்கவில்லை
உன் அருகில் இருந்த
ஒவ்வொரு நிமிடத்தையும்
காதலிக்கிறேன்

முழு உலகம்
இருளில் மூடப்பட்டாலும்
காதலன் உள்ள சிரிப்பு மட்டும்
ஒளியாகும்

நினைவுகளில் நிறைந்திருப்பதை விட
நெஞ்சில் ஒளிந்திருப்பதே
உண்மையான காதல்

மெய் அன்பில்
பேரரசனும் சிறுபிள்ளையாவான்
காதலெனும் உயிரோவியத்தின் முன்

என் இதயத்தை தேடி
அலைகிறோன் இவளது
விழிகளைக் காண்கையில்
இதனை ஏனென்று அறிய
விரும்பவில்லை இவளின்றி
வாழ்ந்திடவும் இயலவில்லை

கைகளின் நடுக்கம்
இதயத்தில் எழும் சுருக்கம்
இதுவே ரொமான்ஸ்
என்பதற்கான சாட்சியம்