மூச்சு மோதும்
அந்த நொடியே
காமம் கவிதையாக மாறுகிறது
மூச்சு மோதும்
அந்த நொடியே
காமம் கவிதையாக மாறுகிறது
நெருக்கம் இல்லாமல் கூட
சில பார்வைகள் தீயாக எரிக்கும்
நீ சென்ற
பின்னும்
ஓடி திரிகிறது
அங்குமிங்கும்
குறும்பு
குழந்தையாய்
மன அறைக்குள்
உன் நினைவுகள்
சுகமான இம்சயாய்
முகம் பார்த்து பேசாமல்
இதயம் பார்த்து
நம்புவது தான்
உண்மையான காதல்
பேராசை எனக்கென்று
ஒன்றுமில்லை
என்விழி நோக்கும்
திசையனைத்தும் விடியலாய்
நீயிருந்தால் போதும்
பார்வையில் பதிந்த தேவை
சொற்களை மிஞ்சும்
வேகமாய் பரவுகிறது
தீண்டலின் மென்மையா
இல்லை
உன் பார்வையின்
தாக்கமா
அசைவற்று போனது
என் கண்களும்
முப்பொழுதும்
நீயென் அருகில்
இல்லா விட்டாலும்
கற்பனையில்
இருக்கின்றாய்
இருண்ட வான வீதியில்
அலங்கரிக்கப்பட்ட
தனிமையின்
தேவதை அவள்
வெறும் வரிகளும்
உன் வார்த்தைகளாகவே
எதிரொலிக்கிறது
காதலோடு கவிதையாய்