மரணம் இல்லாமல்
வாழ ஆசைதான்
மண்ணில் அல்ல
உன் மனதில்

மறந்துவிட்டதாக நினைக்கும்
தருணத்தில் கூட
ஒரு நினைவில்
காதல் மின்னிவிடுகிறது

இதயம் தேடும் பெயர்
ஒரே ஒருவர் என்றால்
அது காதலின்
சாத்தியமற்ற சாத்தியமே

உதிர்ந்திடுமுன்
கொய்தெறிந்துவிட்ட
மலருக்காக
கண்ணீர் வடிக்கின்றது
வானம்...!

இந்த ஏமாற்றத்திற்கும்
வலிக்கும் காரணம் அன்று
உனக்காக என்னை மாற்றிக்
கொண்டது மட்டுமே

சும்மா பார்க்கும்
கண்கள் கூட
உள்ளுக்குள் சிதற வைக்கும்
வலிமை கொண்டவை

நீர் இன்றி மீன் வாழ முடியாது
நீ இன்றி நான் வாழ முடியாது
வருவாயா இல்லை
என்னை வதைப்பாயா

வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும் மை கொண்டு
பல கவிதைகளை

ஒரே நிமிடம் பார்த்தால் போதும்
சில உறவுகள் வாழ்க்கையே ஆகிவிடும்

திகட்டாத தேனீராய்
எப்போது நினைத்தாலும்
சுவைக்க தூண்டுகிறது
உன் தித்திப்பான
நினைவு