கடந்து போக கற்றுக்
கொள் மாயமான இவ்வுலகில்
காயங்களுக்கும் நியாயங்கள்
தேடிக் கொண்டிருந்தால்
நிம்மதி இருக்காது

ஆபத்தில் அறியலாம்
சில உறவுகளின்
குணங்களையும்
அவர்களின்
முக்கியத்துவத்தையும்

வாழ்க்கை உங்கள் கேள்விக்கு
பதில் சொல்லாது ஆனால்
பதில் தேடும் வழியை
கற்றுத் தரும்

அடுத்தவர் முதுகில்
சவாரி செய்யும் சிலர்
அறிவதில்லை
சொந்தகால்களின்
வலிமையை

வாழ்க்கை
ஒரு விசித்திரமான பரீட்சை
அடுத்தவரை பார்த்து
காப்பி அடிப்பதால்
தான் பலர்
தோல்வி அடைகிறார்கள்
காரணம் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி கேள்வித் தாள்கள்

புடிச்சவங்க
யாரும் நினைக்கிற
நேரத்துலகூட
இருக்கிறது இல்ல

விடை தேடும்
பயணம் தான் வாழ்க்கை
சிலருக்கு விடை தெரியவில்லை
பலருக்கு வினாவே
புரியவில்லை

நகர்ந்துகொண்டே இரு
நின்றால் நிலை குலையும்
வாழ்வும் அதுபோல தான்

வாழ்வின் அழகு
சிக்கல்களில் இல்லை
அதை சமாளிக்கும்
திறனில்தான் உள்ளது

அன்பு புரிஞ்சு
உணரக் கூடியது
புரியவச்சோ நிரூபிச்சோ
உணரக் கூடியது இல்லை