நிலவுக்கு பணியாது
காத்திருந்த பனித்துளி
மடிந்து விட்டது காலை
சூரியனை பார்த்ததும்

பொய்யாக நேசிப்பவர்கள்
கூட சந்தோசமாக
இருக்கிறார்கள் உண்மையாக
நேசிப்பவர்கள் தான்
அதிகம் காயப்படுகிறார்கள்

சில வரிகளில் கூறப்படும்
வலிகளின் ஆழம் எல்லோராலும்
புரிந்துகொள்ள முடிவதில்லை
உணர்வுபூர்வமாக
அனுபவப்பட்டவர்களை தவிர

கடினம் என்பது
வாழ்க்கையின் விருப்பமல்ல
ஆனால் வளர்ச்சி அதன் பரிசு

சவாலான சூழ்நிலைகள்
எழும்போது தான்
இருக்கும் நிலையை
விட மேன்மையான
நிலைக்கு உயரமுடியும்

தோல்வி காட்டும் பாதைதான்
உண்மையான நெஞ்சத்தோடு
வாழ வழிகாட்டும்

நாம் தேவையில்லை
என்று சிலர் நினைக்க
துவங்கும் முன்
விலகி நிற்க கற்று
கொள்வது சிறந்தது

உறவுகள் மனம்
நோககூடாதுனு
எந்த விசயத்த மறைக்கின்றோமோ
அதுதான் நமக்கே ஆப்பு
வைக்குது பிரிவை கொடுத்து

வயதுக்கு தகுந்த
சந்தோசத்தை கொடுக்காவிட்டாலும்
வயதுக்கு மீறிய துன்பத்தை தருகிறது
இந்த வாழ்க்கை

நல்லதொரு
மாற்றங்கள்
நம்மிடையே
தவறுகளை
திருத்தி கொள்ள
ஒரு வாய்ப்பாக
(தெளிவு)