அரசியலை போல்
தான் வாழ்க்கையும்
பல எதிர்பார்ப்புகளை
கொடுத்து ஏமாற்றுவதில்

முற்றுப்புள்ளி இல்லா
உரையாடல் நட்பிற்கு
மட்டுமே சொந்தம்

என் புன்னகைக்குப்
பின்னால் ஒரு புண்பட்ட
இதயம் இருக்கிறது

பார்ப்பவர்களுக்கு நான்
சிரிச்சிட்டே இருந்தாலும்
எனக்குள் இருக்கும்
கவலையும் கஷ்டமும்
எனக்கு தான் தெரியும்

கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது

வாழ்க்கை
ஒரு விசித்திரமான பரீட்சை
அடுத்தவரை பார்த்து
காப்பி அடிப்பதால்
தான் பலர்
தோல்வி அடைகிறார்கள்
காரணம் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி கேள்வித் தாள்கள்

நீங்க எந்த அளவுக்கு
நெருங்கி பழகுறிங்களோ
அந்த அளவுக்கு
ஆபத்து அதிகம்
பொதுவா சொன்னேன்

நினைவுகளை வைத்து
வாழாதே
புதிய வெற்றிகளை உருவாக்கு

எதையும் பொறுமையோடு தேடு
பொறாமையோடு தேடாதே

உன்னிடம் இருக்கும்
அன்பும் நன்றியும்
யாரிடமும் இருப்பதில்லை