கடந்த காலத்தின்
சுமையை விட்டுவிட்டு
புதிய கனவுகளை
உருவாக்குங்கள்

நீ போராடும்
ஒவ்வொரு வினாடியும்
உன் வெற்றிக்கு
அடித்தளமாக இருக்கும்

தொடங்கும் துணிவு இருந்தால்
முடிவுக்கு பயமில்லை

எல்லோரிடமும் அன்பாய்
பழகுவதை விடவும் அளவோடு
பழகினால் உறவு நீடிக்கும்

சிரிப்பு போல எளிதான மருந்து
வாழ்க்கைக்குள் இல்ல
ஆனால் அதைக் கண்டுபிடிக்க
முடியாதவர்கள் தான் அதிகம்

உள்ளம் அழுகின்ற போது
வெளியில் இருக்கும்
சிரிப்புகளும் பொய்தான்

நம்மள பிடுச்சு
பேசுறவங்களை விட
பிடுச்ச மாதிரி
நடிச்சு பேசுறவங்க
தான் அதிகம்

அழகு உங்கள் கவனத்தை
ஈர்க்கிறது ஆனால் ஆளுமை
உங்கள் இதயத்தை ஈர்க்கிறது

உன் முயற்சியை
பிறர் பாராட்ட வேண்டியதில்லை
அது உன் கனவுகளை நனவாக்கும்
சக்தியாக போதும்

வெற்றிக்கு துவக்கமும் இல்லை
முடிவும் இல்லை
அது ஒரு தொடர்ச்சியான பயணம்