கொஞ்சம் அனுசரித்து
வாழ்வது நல்ல வாழ்க்கை
எல்லாவற்றையும் அனுசரித்து
வாழ்வது நரக வாழ்க்கை
பொழுதுகள் விரைவாக ஓடும்
ஆனால் உணர்வுகள் மட்டும்
காலத்தை முந்தி செல்கின்றன
முயற்சி இருந்தால்
செல்லும் பாதை
எல்லாம் நாம்
வெல்லும் பாதை தான்
வெற்றியை பாராட்ட முடியாதவர்கள்
அதில் பங்குபெற முடியாதவர்கள்
கண்ணீர் வரும் இடம்
காதல்தான் என்றில்லை
கனவுகள் சிதறும் நேரமும் கூட
நாளைய வெற்றிக்காக
இன்றைய அமைதியை
விட்டுக் கொடுப்பது
தவறு இல்லை
சில வீழ்ச்சிகள்
நம் உள்ளத்தில்
ஒரு கவிதையை உருவாக்குகின்றன
மதித்தால்
மலராக இரு
மிதித்தால்
முள்ளாக இரு
தைரியம் கொண்டு
எடுக்கும் ஒவ்வொரு அடியும்
பயத்தை பின்னுக்கு தள்ளும்
தோல்விகள் உன்னை
தொடர்ந்தாலும் உந்தன்
தோள் மேலே அமர்ந்தாலும்
அவற்றை தோழனாக
ஏற்றுக்கொள்
📖 பக்கம் 93 / 606
📋 Copied