தன்னை மிதித்தவரின்
கால்தடத்தை ஓவியமாக
மாற்றிவிடுகிறது மண்

துயரங்களை தாங்கும்
சக்தியே
உண்மையான மனவீரம்

வாழ்க்கை
ஒரு புத்தகம் போன்றது
ஒவ்வொரு பக்கமும்
ஒரு பாடமாக இருக்கும்

வாழ்க்கை ஒரு நதி போல
தடை வந்தாலும்
ஓட்டம் தேடும்
வழியை உருவாக்கும்

வெற்றிக்கு துவக்கமும் இல்லை
முடிவும் இல்லை
அது ஒரு தொடர்ச்சியான பயணம்

ஓவியத்திற்கு அழகு
சேர்ப்பது பல வண்ணங்கள்
அதுபோல தான் நம்
மனத்திற்கு அழகு
சேர்ப்பது நல்லெண்ணங்கள்

சில சமயம்
மீள முடியாதா
தனிமைக்கு தள்ளப்படுகின்றேன்
எனது பேச்சுக்கு
பிறர் இடம் இருந்து
மதிப்பு குறையும் போது

மற்றவர்களின் பிரச்சினையில்
தலையிடாமல் விலகியிருப்பது
மிகவும் நல்லது
நமக்கான பாதையை கவனித்தால்
வாழ்க்கை நிம்மதியையும்
மன அமைதியையும் தரும்

நேர்மையுடன் வாழ்ந்த வாழ்க்கையை
உலகமே நாளொருநாள் புரிந்துகொளும்

நீ போராடும்
ஒவ்வொரு வினாடியும்
உன் வெற்றிக்கு
அடித்தளமாக இருக்கும்