சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன
சில ஞாபகங்கள் எப்போதும் வாசம் வீசிக் கொண்டே இருக்கும் இதயத்தில் காலங்கள் கடந்தாலும் கூட இருந்தவர்கள் பிரிந்தாலும்
மதி கொண்டு முயற்சித்தால் விதி என்று ஏதுமில்லை இங்கு
தேவை மட்டும் இல்லையென்றால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசவே யோசிப்பார்கள்
யாரேனும் உன்னிடம் பொறாமை கொண்டால் அது உன் வளர்ச்சிக்கு உண்மை சான்று
மதத்தை வளர்த்தால் மதம் பிடிக்கும் மரத்தை வளர்த்தால் காய், கனி, மழை, நிழல் தரும் அடுத்த தலைமுறைக்கு உயிர் தரும்
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கசப்பான சம்பவங்கள் தான் நமக்கு நல்ல பாடங்களையும் நல்ல அறிவுரைகளையும் வழங்கி விட்டு செல்லும்
அழகு வாழ்க்கையில் கிடைக்காது அதை காணும் மனசு தான் அழகு
உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா ஒரே தீர்வு யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சில ஆசைகள் மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள் நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள்