இங்கு உழைக்காமல்
வாழ்பவர்களை விட
வாழாமல்
உழைப்பவர்களே அதிகம்

வாழ்க்கை
இருக்கும் போதே
வாழ்ந்து விடு
அடுத்த நொடி
என்ன நடக்கும்
என்று கூட
யாருக்கும் தெரியாது

கடின உழைப்புக்கு
ஈடு இணையில்லை

பிறக்கும்
ஒவ்வொரு விடியலும்
புது முயற்சியும்
புத்துணர்ச்சியுமாகத்
துவங்கட்டும்

எல்லா கஷ்டங்களும்
தீர்ந்த பிறகு தான்
சிரிப்பேன் என நினைத்துக்
கொண்டிருந்தால்
சாகும் வரை எவராலும்
சிரிக்க முடியாது

இருளின் முக்கியத்துவம் தெரிய
ஒளி தேவைப்படவில்லை
ஆனால் இருளிலும் பயணிக்க
தைரியம் தேவைப்படும்

நம்மால் ஒருவருக்கு
பிரச்சனைகள் வருதென்றால்
அந்த இடத்தவிட்டு
விலகிரணும்
அது உறவானாலும் சரி
உயிர் நட்பென்றாலும் சரி

வழி தெரியாமல்
போனதில்லை வாழ்க்கை
நம் பயத்தைப் பார்த்து மவுனமாகிறது

வீரன் தோல்வியைக்
கண்டு ஓட மாட்டான்

இன்பமோ துன்பமோ
அனுபவிக்கபோவது நீ
எனவே முடிவும் உனதாகட்டும்