நம்முடைய வாழ்க்கையை
செதுக்க அதிக நேரம் தேவை
பிறரின் வாழ்க்கையில்
தலையிட நேரம்
விரயம் செய்ய வேண்டாம்

ஆண்மையில்
தாய்மை பேரழகு
என்பதால் என்னவோ
காண்பதற்குஅரிது

நமக்கு நாமே சுமை
தேவையற்ற சில
நினைவுகளை சுமப்பதால்

வாழ்க்கையில்
வெற்றியை அடைய
முன்னேற்றம் முக்கியம்
அல்லாமல் விரைவாக ஓடுவதில்லை

கடினமான நாட்கள்
வாழ்க்கையில் தேவை
அதில்தான் மனசு உருமாறும்

எவ்வளவு கெட்டவர்களாக
இருந்தாலும் அவர்களிடம்
நாம் கற்றுக்கொள்ள ஏதாவது
ஒரு நல்ல பழக்கம்
கண்டிப்பாக இருக்கும்

செருப்பாக உழைத்தாலும்
சேமித்து வைக்க
பழகுங்கள் வாழ்க்கை
அறுந்தால் தைப்பதற்கு
நிச்சயம் உதவும்

சிரிப்பின் பின்னாலே
சில மௌனங்கள் அழுகிறது

தொலைந்த நேரத்தை
திருப்பிக் கொண்டு வர முடியாது
ஆனால் புதிய முயற்சிகளை தொடங்கலாம்

உழைப்பின் சுவை தான்
வெற்றியின் இனிமை