சமாதானம் அற்ற
மனதுடன் கொண்ட செல்வம்
வெறும் சுமைதான்
சமாதானம் அற்ற
மனதுடன் கொண்ட செல்வம்
வெறும் சுமைதான்
வீழ்ந்ததை நினைக்காமல்
எழும் எண்ணமே
முன்னேற்றத்தின் விதை
அதிகாரத்தால் விலைக்குவாங்க
முடியாததில்
முதன்மையானது அன்பு
எதுவும்
தனக்கு நேரும் வரை
எல்லாம் வேடிக்கை தான்
தோல்வியோடு நட்பு வைத்தவனே
வாழ்க்கையில் வெற்றி காண்பான்
அன்பும்
ஒரு நாள்
தோற்று போகும்
உண்மை இல்லாதவரை
நேசித்தால்
எதிரில் நிற்பது
யார் என்பது
முக்கியமில்லை
எப்படி எதிர்கொள்ள
போகிறோம்
என்பதே முக்கியம்
வீழ்ந்தாலும் மீண்டும்
எழுந்து மரங்களாக
உயர்ந்து காட்டுகிறது
விதை
சில நொடிப் பொழுது
வாழ்ந்தாலும் தானும்
குதூகலமாகவும் தன்னை
ரசிப்பவர்களையும்
பரவசமாக்கும் பனித்துளி
சில புண்கள் உடலில் அல்ல
மனதில் ஏற்படும்
அவையே அதிகம் வலிக்கும்