எவ்வளவு பெரிய பிடிவாத
காரியையும் உடைத்து
அழுக வைப்பதில்
வாழ்க்கைக்கு நிகர்
எதுவும் இல்லை

அடுத்த நொடி
எதுவும் நடக்கலாம்
so கிடைத்த நொடியில்
ரசிப்போம் வாழ்க்கையை

உங்கள் வாழ்க்கை
போலி மனிதர்களால்
நிறைந்திருக்கும் போது
யாருக்கு எதிரி தேவை

விடை தெரிந்த
கேள்விகளுடன்
துணிவதல்ல வாழ்க்கை
விடை தெரியாத
கேள்விகளுக்கும்
விடை சொல்ல
துணிவதே வாழ்க்கை

நீ இயற்கையை அழிப்பது
சரி தான் என்றால்
உன்னை இயற்கை
அழிப்பதுவும் சரி தானே

நீ நினைப்பதை விட
நீ செய்யும் செயலே
உன்னை உருவாக்கும்

அதிர்ஷ்டம்
நம்மை ஏமாற்றலாம்
ஆனால் உழைப்பு
ஒரு போதும்
ஏமாற்றுவதில்லை

மழை வரும்போது
மண்ணின் வாசனை
எப்படி இனிமையாக இருக்கிறதோ
சோதனைகள் வந்த பிறகே
வாழ்க்கையின் அர்த்தம் புரியும்

எவ்வளவு நாளுக்கு
பின் பேசினாலும்
முன்பிருந்த அதே
பாசமும் நேசமும்
மாறாமல் பழகும்
நட்புகளே
நமக்கு கிடைத்த
வரங்கள்

உன்னை இயல்பாக
கவர்ந்து வைத்திருக்க
என்னிடம் சொல்லிக் கொள்ளும்
படி எதுவுமில்லை என்னவனே
உன் மீதான பைத்தியமும்
சில கவிதைகளும் தவிர