பிடித்தவர்களிடம் அன்பாய்
இருப்பதை விட
உண்மையாய் இருங்க
அன்பை விட உண்மை
அதிக மகிழ்ச்சியானது
அதிக ஆழமானது

நடுவழியில்
ஓய்வதற்கான காரணங்கள்
பல இருந்தாலும்
உன்னால் முடிக்கும் என்பதே
ஒரே காரணம் போதும்

நிலையில்லா
நீர்குமிழியல்ல நட்பு
அதன் உள்ளிருக்கும்
நிரந்தரமான காற்று

மரணத்தை காட்டிலும்
கொடுமையானது மனக்கவலை
மரணம் ஒரு முறை தான்
கொல்லும் மனக்கவலை
நொடிக்கு நொடி கொல்லும்

உன்னை நேசிப்பவர்களுக்கு
விடையாய் இரு
உன்னை வெறுப்பவர்களுக்கு
கேள்விக் குறியாய் இரு

இருட்டே இல்லையெனில்
ஒளியின் மதிப்பு புரியாது

கஷ்டப்படும் போது
உதவி செய்பவர்களை
விட மேன் மேலும்
கஷ்டப்படுத்துபவர்களே
இங்கு ஏராளம்

எதிர்பார்ப்பின் ஆர்வம்
அது நிறைவேறும்
போது இருப்பதில்லை

இரவோடு
காணாமல் போகும்
நிலவாக நினைவுகளும்
இருந்தா மனமும
சிறு நேரமாவது
நிம்மதியா இருக்குமில்ல

தோல்வியை சந்திக்க
துணிந்து போனா
வெற்றியும் உன்னை
காண வந்துவிடும்