மீள முடியாத சோகம்
என்றெல்லாம் ஒன்றுமில்லை
அதைவிட பெரிய கனமான
சோகம் வரும் வரையே
சில தருணங்கள்
நடக்கவேண்டும் என்பதற்காகத்தான்
காலம் பொறுமை காட்டுகிறது
முன்னேறத் தொடங்கும் மனதை
கட்டுப்படுத்த முடியாது
அது வெற்றியை நோக்கிச் செல்லும்
வாழ்நாட்கள்
அதிகம் வேண்டாம்
வாழ்ந்த நாட்கள்
அதிகமிருந்தால் போதும்
தெரிந்த சிலரிடம்
கொடுத்த பணமும்
தெரியாத சிலரிடம்
காட்டிய பாசமும்
பல நேரம் திரும்ப
கிடைப்பதே இல்லை
பொறாமை குணத்தை
போர்வையாய்
போர்த்தி கொள்ளாதே
அது உன் மகிழ்ச்சியை
மட்டுமின்றி உன்னையே
அழித்துவிடும்
சில தருணங்களில்
உறவுகளை உருவாக்குகிறது
சில தருணங்களில் உறவுகளை
உடைத்தும் விடுகிறது
வெற்றி பெறும் வரை
விடாமுயற்சி செய்யுங்கள்
ஏனெனில் அந்த முயற்சி
உங்களை ஒரு புதிய உலகத்துக்கு
அழைத்துச் செல்லும்
சிரிப்பின் பின்னாலே
சில மௌனங்கள் அழுகிறது
நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
சில உறவுகள்
சொல்லவும் முடியாமல்
சில ஆசைகள்
மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
சில நினைவுகள்
📖 பக்கம் 78 / 606
📋 Copied