நிஜத்தில் நடக்க வேண்டும்
என்று நினைப்பதெல்லாம்
கனவில் நடக்கிறது
கனவில் கூட
நடக்கக் கூடாது
என்று நினைப்தெல்லாம்
நிஜத்தில் நடக்கிறது
தனக்கு பிடிக்காதவரையும்
தன்னை பிடிக்காதவரையும்
கண்டும் காணாமல்
கடக்கும் பாதங்களே
மகிழ்ச்சிக்கு ஏங்காமல்
நிம்மதியில் நிறையும்
வெற்றியாளர்கள் தோல்வியில்
பயம் கொள்ளாமல்
முன்னேறுவார்கள்
கிடைக்காததை எல்லாம்
பிடிக்காது என்று
சொல்ல பழகிக்
கொண்டவர்கள்
பக்குவப்பட்டவர்கள்
இன்பமும் துன்பமும்
நம் வாழ்வில்
வந்து செல்லும் பேருந்துகள்
எதில் பயணம்
செய்ய வேண்டும் என்பதை
நாம் தான்
முடிவு செய்ய வேண்டும்
வாழ்க்கையில்
எல்லா தவறும்
தோல்வி அல்ல
சிலவை நல்ல பாடமாகும்
மனம் சோர்ந்த நேரத்தில் கூட
முன்னே நகர்வது
ஒரு பெரிய வலிமை
சிரிப்பும் கண்ணீரும்
ஒரே நேரத்தில்
பகிரக்கூடிய உறவு நட்பு
வாழ்வின் அனைத்துக் குறைகளை
மறக்கும் ஓர் அரிய செல்வம்
முயற்சி செய்யாமல்
விடை காண முடியாது
முயற்சியில்தான்
வாழ்க்கையின் உத்தரவாதம்
நம்மை பற்றி
முதுகுக்கு பின்னால்
பேசுபவர்கள்
நம் காதுக்கு
கேட்குற மாதிரி கூட
சத்தமாக பேசுவதில்லை
என்பதில் அடங்கியிருக்கு
நம் வெற்றி
📖 பக்கம் 80 / 606
📋 Copied