உதிர்வோம் என தெரிந்தும் பூக்கள் மலர மறுப்பதில்லை
உதிர்வோம் என தெரிந்தும் பூக்கள் மலர மறுப்பதில்லை
பிழைகள் இல்லாமல்
வாழ்ந்தவன் யாரும் இல்லை
பிழைகளில் கற்றவன் தான் பெரியவன்
நம்பிக்கையை இழக்காதவர்தான்
நாளைய வெற்றியை
கட்டமைக்கிறான்
நீ நம்பிக்கையை விட்டுவிட்டால்
வாய்ப்புகளும் உன்னை விட்டு விடும்
நாளைய
அதிஷ்டத்தை நம்பி
இன்றைய வாய்ப்புகளை
தட்டி கழிப்பவர்
எப்போதும்வெற்றி பெறமாட்டார்கள்
மன பலம் ஒன்றே
முயலாத காரியத்தையும்
செய்ய முடியுமென
ஊக்கம் அளிக்கும்
வாழ்க்கையை
வெல்ல நினைக்காதே
புரிந்துகொள்
அதுவே வெற்றி
தன்னம்பிக்கை என்னும்
செல்வம் உன்னிடம் இருந்தால்
வெற்றி எனும்
படிகளில் ஏறி
மரியாதை என்னும்
மணிமகுடத்தை
மகிழ்ச்சியுடன் அணியலாம்
கலையாதே கனவே
நீ கலைந்தால்
தொலைந்தே போகும்
என இலட்சியங்கள்
வாழ்வின் சிரிப்பை
வாங்க பணம் போதாது
ஆனால் மனம் போதும்