உயிரோடு இருக்க
ஒரு பிறவி போதும்
ஆனால் உன்
நட்போடு வாழ பல
ஜென்மம் வேண்டும்

வாழ்க்கை
உனக்கு வசமாவதும்
அதுவே உனக்கு
விஷமாவதும்
உன் கைகளில்
தான் இருக்கிறது

தோல்வி
உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு

நிஜம் தான்
வாழ்க்கைக்கு அழகு
அந்த நிஜத்தை
விரும்புவது தான்
நம் ஒவ்வொருவருக்கும் அழகு

இமைகளின் கூச்சலில்
விழும் கண்ணீர்
உள்ளத்தின் சுமையை
வெளிக்கொணர்கிறது

எதுவுமே நிரந்தரம் இல்லனு
அறிவுக்கு தெரியுது
ஆனா மனசு அதை
ஏற்க மறுக்கிறது

சிறகுகள் இல்லாமலே
கனவுகள் பறக்கும்
முயற்சியே அதற்கு எரிபொருள்

வாழ்க்கையின் மதிப்பு
நாம் சுவாசித்த ஆண்டுகளில் அல்ல
நாம் செய்த செயல்களில் தான்

விசுவாசம் ஒரு விலை
உயர்ந்த பரிசு அதை
மலிவான மக்களிடம்
எதிர்பார்க்காதே

மற்றவர் முந்தியதை
பார்ப்பதை விட
நீ பின்வந்ததற்கான
காரணத்தை மாற்று