அழுகை ஒரு பலவீனம் அல்ல
அது உணர்ச்சியின்
நிறைவான வெளிப்பாடு
வாய்ப்பு வரவில்லை என்றால்
வாய்ப்பாக நீயே மாறி விடு
விழுந்து விழுந்து சிரியுங்கள்
ஆனால் விழுந்தவனைப்
பார்த்து சிரிக்காதீர்கள்
வாழ்க்கையை ஓட்டாதே
அதை ரசித்து நட
வாழ்க்கை ஒரு விளையாட்டு மாதிரி
எதற்கும் பயப்படாமல்
கடைசி வரை விளையாட வேண்டும்
முடிவில் உயர்வது கனவல்ல
அதற்காக தினமும்
உழைத்த நிமிடங்கள் தான்
வாழ்க்கை ஒருபோதும்
ஸ்கிரிப்ட் போல நடக்காது
ஆனால் அதன் திருப்பங்கள் தான்
அதைப் பொன்னாக மாற்றும்
வெற்றியை நோக்கி
செல்லும் பாதையில்
வெறுப்பும் விமர்சனமும்
கற்களாக வரும்
அதை கடந்து
செல்லும் காலடிகள்
வெற்றியின் சுடரை
எரியச் செய்கின்றன
பிறரின் வெற்றியை
ஏற்காத மனம்
தன் தோல்வியை
உணர மறுக்கிறது
அடுத்தவர்
திரும்பி பார்க்கும்
அளவிற்கு
இருக்க வேண்டுமே
தவிர
திருத்தி பார்க்கும்
அளவிற்கு
இருத்தல் கூடாது
நம் வாழ்க்கை
📖 பக்கம் 72 / 606
📋 Copied