மறுக்கப்பட்ட வாய்ப்புகள்
உன்னை வலிமையாக்கும்

சந்தோஷத்திற்காக வாழ்க்கையில்
ஆயிரம் குறிக்கோள்களுடன்
இருக்கும் பலருக்கும்
தெரிவதில்லை
நிம்மதியும் சந்தோஷமும்
மிக எளிதான விஷயத்தில்
குடி இருப்பதை

கேக்க முடியாத
கேள்விகளும்
சொல்ல முடியாத
பதில்களும்
என்றுமே சுவாரசியமினவை

தடைகள்
நம்மைத் தடுப்பதற்கு
அல்ல நாம் தாண்டும்
உயரத்தைக்
கூட்டுவதற்கே

நம்மை
ஒருவர் மதிக்கவில்லை
என்று நினைப்பது
முட்டாள்தனம்
அவங்களுக்கு
நம் மதிப்பு தெரியவில்லை
என்பதே உண்மை
அதற்கு நாம் பொறுப்பல்ல

என்னவெல்லாமோ ஆகனும்னு
ஆசைப்பட்டு கடைசியில்
குழந்தையாகவே இருந்திருக்கலாம்
என்ற ஏக்கத்தில்
முடிகிறது வாழ்க்கை

இல்லாதது கிடைக்கும்
போது இருப்பதை
மறப்பது மனித
இயல்பு தானே

கருவறை இருளுக்கும்
கல்லறை இருளுக்கும்
நடுவில் இருக்கும்
வெளிச்சமே வாழ்க்கை

மலையைப் பார்த்து
மலைத்து விடாதே
மலை மீது ஏறினால்
அதுவும் உன் காலடியில்

சிறந்த உறவுகள்
வாழ்க்கையின் அழகான
தருணங்களை உருவாக்கும்