வலி இருந்தும்
வேறு வழி இன்றி
சிரிப்பவர்கள்
ஏராளம்

நினைப்பதை
சரியாக நினைத்தால்
நடப்பதும்
சரியாகவே நடக்கும்

போலிக்கு தான்
பரிசும் பாராட்டும்
உண்மைக்கு ஆறுதல்
பரிசு மட்டுமே

சில மௌனங்கள்
ஒலிக்கிறது போன்ற
உணர்வை தரும்
அது தான் உண்மை சோகம்

பிரச்சினைகள்
நம்மை செதுக்க
வருவதாக நினைத்து
எதிர் கொள்ளுங்கள்
சிதைந்து போகாதீர்கள்

இன்றைய
அசமந்தபோக்கால்
நாளைய வெற்றிகள் கூட
தடைப்படலாம்

நண்பர்களின் அன்பு
வாழ்க்கையின்
கடுமையான தருணங்களை
எளிதாக்குகிறது

வாழ்க்கையின்
கடினங்களை கடந்து
பயிற்சியின் மூலம்
உங்கள் திறமைகளை
வெளிப்படுத்துங்கள்

தன்னை நம்புகிறவன்
எல்லா சோதனைகளையும்
வெல்லுகிறான்

கோபம் தான்
ஒரு மனிதனின்
மிகப்பெரிய எதிரி
அதனை கட்டுப்படுத்த
தவறினால்
நம் வாழ்க்கையையே
புரட்டி போட்டு விடும்