முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் முடியாதது கூட ஒருநாள் சாதனையாகும்
உன்னை எதிர்பார்த்து பெற்றெடுப்பாள் அன்னை உன் எதிர்காலத்தை பெற்றுத் தருவான் தந்தை
வாழ்க்கை முடியும் வரையிலும் ஒரு புதிராகவே இருக்கிறது புதிரைக் களைவதே வாழ்வின் சுவாரஸ்யமாகி விட்டது
சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க
கவிதையும் ஒரு போதை எதையாவது கிறுக்கத்தான் சொல்லுது
பொய்யாக தோற்றமளிக்கும் சந்தோஷங்களை துரத்துவதை விட உண்மையாக கிடைக்கும் வலிகளை வரவேற்பதே உன் வாழ்க்கையை வசந்தமாக்கும்
மூன்றாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி ஆனால் ஒவ்வொரு தோல்வியிலும் படிப்படியாக முன்னேறுபவன் உண்மையான போராளி
எட்டி பிடிக்கும் தூரத்தில் வெற்றியோ தோல்வியோ இல்லை கற்பனையை தவிர
அன்பு உன் மனதில் இருந்தால் அழகு உன் முகத்தில் இருக்கும்