வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும்
வேதனை இருக்கும்
எதையும் தாங்கும்
இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும்
அமைதி இருக்கும்

விடை பெறும் ஒவ்வொருவரும்
அளவுக்கதிகமான வலிகளையும்
ஆறுதலுக்காக நினைவுகளையும்
கொடுத்து செல்பவர்களே

வாழ்க்கையை
மெதுவாக விரிக்க தெரிந்தால்
அழகு சிதறாமல் தெரியும்

உண்மையான திறமை
உழைப்பில் மட்டும் திகழும்
அதுவே வெற்றிக்கான வழிகாட்டி

தன் விருப்பத்தை
தியாகம் செய்து
நம் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும்
உறவை மட்டும்
என்றும் இழந்து விட கூடாது

குறுக்குவழி தேடாதே
உன் பாதை நீயே உருவாக்கு

வறுமைக்கு பிறகு வரும் செல்வமே
வாழ்கையில் இறுதி வரை நிலைக்கும்

தேடியது கிடைக்கும்
போது தான்
தேடல் கூட இன்னும்
அழகாகிறது

பொய்யாக தோற்றமளிக்கும்
சந்தோஷங்களை
துரத்துவதை விட
உண்மையாக கிடைக்கும்
வலிகளை வரவேற்பதே
உன் வாழ்க்கையை
வசந்தமாக்கும்

நேரம் செல்லும் போதே
வாழ்க்கையின் உண்மையான
அர்த்தம் புரியும்
ஆகவே ஒவ்வொரு கணமும்
அருமையானதாக வாழுங்கள்