சிரிக்கும் போது
முகம் அழகு
அன்பு காட்டும் போது
மனம் அழகு
நம்பிக்கை வரும் போது
வாழ்க்கை அழகு
நீ நீயாகவே
இருக்கும் போது
எல்லாமே அழகு

வெற்றியை கனவாக
மட்டும் அல்லாமல்
தினசரி செயல்களாக மாற்றும்
மனமே நம்மை முன்னே கூட்டும்

சுமையற்ற வாழ்க்கை
சுவையற்றுப் போகும்

இல்லாத போது
தேடல் அதிகம்
இருக்கின்ற போது
அலட்சியம் அதிகம்

கடவுள் எழுதி முடித்துவிட்ட
நாடகத்துக்கு தினமும்
போடுகின்றோம் வேஷம்

உன் முதுகில் குத்தும் நண்பனை
விட முகத்தில் அறையும்
எதிரியைப் பெறுவது சிறந்தது

செல் செல் செல்
நல் வழியில் செல்
சொல் சொல் சொல்
நல் வார்த்தை சொல்

சேமிப்பு இல்லையென்றால்
உழைப்பும் வீணே

கண்ணீரால் கண்கள்
ஓய்ந்தாலும் உள்ளம்
புதிய தெளிவைப் பெறும்

நம்மை பற்றி
முதுகுக்கு பின்னால்
பேசுபவர்கள்
நம் காதுக்கு
கேட்குற மாதிரி கூட
சத்தமாக பேசுவதில்லை
என்பதில் அடங்கியிருக்கு
நம் வெற்றி