தொலைவின் தேடல்கள்
எல்லாமே அருகில்
இருந்த போது
தொலைக்கப் பட்டவையே

மகத்தான சாதனை
புரிந்தவர்கள் யாவருமே
தோல்வி பல
கடந்து வென்றவர்களே

மற்றவருக்கு ஆறுதல்
சொல்லும் போது
இருக்கும் தைரியம்
தனக்கு தேவைப்படும்
போது இருப்பதில்லை

நம் எதிர்பார்ப்பு தான்
நம்மை அதிகமாக
வலிக்க வைக்கும்

அளவு என்பது
உப்புக்கு மட்டும் அல்ல
சில உறவுகளும் தான்

நேரத்தை மதிப்பவன்
வாழ்க்கையையும் மதிக்கிறான்

வறுமைக்கு பிறகு வரும்
செல்வமே வாழ்க்கையில்
இறுதிவரை நிலைக்கும்

விட்டுக்கொடுத்தே
பழகியவர்களுக்கு
விரும்பம் என்பதன்
உணர்வே மறந்து போகிறது

ஊக்கம் என்பது
வெளியில் கிடைக்காதது
அதை உள்ளேயே வளர்க்க வேண்டும்

உடைந்த மனதை
சீராக்கும் மருந்து
தன்னம்பிக்கை தான்