இஷ்டப்பட தெரிந்த உனக்கு
கஷ்டப்பட ஏன் தெரியவில்லை
கஷ்டத்தை இஷ்டப்பட்டு
ஒத்துக்கொள்ள முற்படு

மாற்றம் காத்திருக்காது
அதை உனக்குள் உருவாக்கி விடு

இன்று கடினமானதாய் தெரிந்தாலும்
நாளைய வெற்றிக்கான அடித்தளம்தான்

பல அவமானங்களை
கடக்கும் ஒருவன்
மனதில் ஓடும் ஒரே
வாசகம் நான் ஒரு
நாள் ஜெயிப்பேன்

எந்திர
வாழ்க்கையை
வாழ கற்றுக்
கொண்ட நமக்கு
நம்மை பற்றி
யோசிக்க நேரமில்லை

கனவு மட்டுமே போதாது
அதை நனவாக்க
உழைப்பு அவசியம்

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்

முயற்சியை
இழக்காதவன் தான்
எப்போதும்
முன்னிலைப் பிடிக்கிறான்

இந்த உலகத்திற்கு
நான் வருவதற்கு
முன்பாகவே என்னை
காதலித்தவள்
நீ மட்டுமே அம்மா

சூழ்நிலை கடக்க துணிந்தால்
வாழ்க்கை
உனது பாதையை தானே
ஒளிரச் செய்யும்