வாழ்க்கையில்
பல வலிகள் உண்டு
அதே சமயம்
பல வழிகளும் உண்டு
ஆதலால்
தைரியமாய் நகருந்து
கொண்டே இரு
நட்பு விட்டுப்போகலாம்
நினைவுகள் மட்டும் விலக மறுக்கும்
சில விஷயம்
புரிந்தால் தான் பிடிக்கும்
சில விஷயம்
பிடித்தால் தான் புரியும்
பலரை சில காலமும்
சிலரை பல காலமும்
ஏமாற்றலாம்
வாழ்க்கை நீளத்தைப் பற்றியது
அல்ல அர்த்தத்தைப் பற்றியது
இருப்பதை யாரும்
பார்ப்பதில்லை
இல்லாததை தேடி தான்
பயணிக்கின்றனர்
இருப்பதோடுவாழ்
உனக்கு வரவேண்டியது
உன்னை வந்தடைந்தே தீரும்
உறுதியான மனிதருக்கு
தோல்வி எதுவுமில்லை
போகும் பாதையில்
கற்றுக்கொள்ள பாடங்கள்
மட்டுமே உள்ளன
சிலரை விட்டு
விலக முடிவதில்லை
காரணம் உலகமாய் நினைத்து
வாழ்ந்து விட்டதாலும்
உயிர் கூட உடலை விட்டு
பிரிய மறுப்பதில்லை
உடைந்த மனதை
சீராக்கும் மருந்து
தன்னம்பிக்கை தான்
சில சோகங்கள்
நம்மை அமைதியாக்கும்
அது தான் அவற்றின் அர்த்தம்
📖 பக்கம் 64 / 606
📋 Copied