மன்னிக்க மனம் இருந்தும்
மன்னித்துவிடு என்ற
ஒரு வார்த்தையை
கூறாமல் ஈகோவால்
உடைந்த உறவுகளே அதிகம்
வாழ்க்கை என்பது
வெற்றி தோல்வியின்
கூட்டுத்தொகை அல்ல
மனம் அமைதியாக இருக்க
கற்றுக்கொள்ளும் பயணம்
முடியாது என்று சொல்லும் உலகமே
முயற்சி செய்தால் மௌனமாகும்
உங்களை பலவீனப்படுத்தும்
யாரொருவரின் அன்பிலும்
தேங்கி விடாதீர்கள்
அதுவே பின்
மீளவே முடியாத
ஒரு போதையாகிவிடும்
அது ஒரு அழகிய
காலம் என்று
சொல்லுமளவு ஏதேனும்
ஒரு நிகழ்வு
எல்லோர் வாழ்விலும்
இருக்கத்தான் செய்கிறது
புரிந்தும் புரியாத மாதிரி
இருப்பவர்களிடம்
நீங்கள் தெரிந்தும் தெரியாத
மாதிரி இருக்க பழகிக்
கொள்ள வேண்டும்
உன்னை
நீ புரிந்துகொள்ளவும்
தெளிவு கொள்ளவும்
பயணம்
ஒரு அற்புதமான வழி
மன அமைதி பெற
விரும்பினால் பிறர்
குறைகளைக் காணாதே
அதற்குப் பதிலாக உன்
குறைகளைக் காண்
காலம் எந்தத்
காயத்தையும்
ஆற்றுவது இல்லை
அது நம் மனதை
பக்குவபடுத்துகிறது
அவ்வளவு தான்
மழையின் முதல் துளியை
வெறுப்பதும் கடைசி துளிக்கு
வணக்கம் வைப்பதும்
மழைக் காலமா
வெயில் காலமா என்ற
சூழ்ந்நிலையை பொறுத்தது
📖 பக்கம் 56 / 606
📋 Copied