ஒளியை கண்டால்
ஓடிவரும் நிழல்
இருளிலும் உடனிருக்கும் நிஜம்
ஒருத்தவங்கள பிடிக்கலன்னா
அவங்களப்பத்தி யாரென்ன
தப்பா சொன்னாலும்
நம்பத்தோணுதுல்ல
அதுக்கு பேர்தான்
(வன்மம்)
வெற்றி கதவல்ல
அது ஒரு பயணத்தின்
அடையாளம்
எதிலும் நம்பிக்கையற்றவர்
எங்கேயும் சாய்ந்தும்
நிக்க மாட்டாங்க
சார்ந்தும் இருக்க மாட்டாங்க
உறக்கம் தொலைந்த
இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது
சோகத்தை தாண்டி
எழுந்து நின்றால்
வாழ்வின்
புதிய படிகள் தெரியும்
ஒவ்வொரு விழுதும்
அனுபவம் என்ற
கண்ணாடியை
பளபளப்பாகச் செய்யும்
தன்னை நியாயப்படுத்தி
கிடைக்கின்ற எதற்கும்
ஆயுள் குறைவு தான்
புரியாத பிரியங்கள் பிரிவுகளால்
முடிவை தரும்
அணைக்க
ஆயிரம் கைகள்
இருக்கும் ஆனால்
ஆதரவாக
உன் கையை தவிர
வேறு கைகள் இராது
இப்படி இருக்க
கூடாதுனு
நினைச்சாலும் சூழ்நிலை
இப்படியே
இருக்க வைக்குது
சோகமான உணர்வுகள்
சில சமயம் நம்மை
நம் உண்மை நிலைக்கு
கொண்டு சேர்க்கும்
📖 பக்கம் 55 / 606
📋 Copied