கோபத்தில் ஏழையாக இரு அன்பில் பணக்ககாரனாக இரு வாழ்க்கை சிறக்கும்
காயங்கள் தான் மனிதனை போராளியாக உருவாக்கும்
கடிகாரம் காத்திருக்கும் போது மெதுவாக நகரும் தாமதம் ஆகும் போது வேகமாக நகரும் நேரம் மனதை பொறுத்தது அதை பயனுள்ளதாக மாற்று
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே
தோல்வியை தோற்கடிக்க வேண்டுமென்றால் முயற்சிக்க வேண்டும்
பிரச்சினைகள் நம்மை செதுக்க வருவதாக நினைத்து எதிர் கொள்ளுங்கள் சிதைந்து போகாதீர்கள்
நான் கற்றுக்கொள்ள விரும்பாத பாடங்களை வாழ்க்கை எனக்கு கற்றுத் தருகிறது
தோல்வி வந்தால் பாதை முடிந்தது அல்ல புதிய பாதை தொடங்கும் அழைப்பு
எல்லா விசயங்களிலும் நேருக்கு நேர் போய் தான் ஜெயிக்க வேண்டுமென்றல்ல சில விசயங்களில் விலகி நின்றாலே ஜெயிச்ச மாதிரி தாங்க பலருக்கும் நிம்மதி கொடுத்த திருப்தி
பட்டுப்போன மரத்திலும் ஓர் இலை உயிர்த்திருக்கும் மீண்டும் மரம் துளிர்விடும் என்ற கடைசி நம்பிக்கையின் வாசத்தில் மரத்தின் வாழ்க்கையும் மனிதனின் வாழ்க்கையும் ஓர் வகையில் ஒன்று தான்