வாசிக்க முடியாத
கவிதை நீ
வாசிக்க ஆசை
உன் மனம்
என்ற புத்தகத்தை

உறக்கம் தொலைந்த
இரவுகளில் நினைவுகள்
விழித்துக் கொள்கிறது

விழுந்தால்தான்
எழுவதின் மதிப்பு புரியும்

நான்
ரசித்த
முதல் இசை
தந்தையின்
இதயத்துடிப்பு

காலம் யாருக்காகவும்
காத்திருப்பது இல்லை
ஆனால்
உன்னை நேசிக்கும்
உண்மையான இதயம்
நிச்சயம் உனக்காக
காத்திருக்கும் என்றும்

நம்மிடம்
பேசுகின்ற அனைவரும்
உண்மையாக
தான் பேசுகின்றார்களா
என்று யோசிக்க ஆரம்பித்தால்
வாழ்க்கை நிம்மதி
இல்லாமல் போய்விடும்

கிடைக்காமல்
போன இன்பங்களைவிட
தேடாமல்விட்ட
இன்பங்களே அதிகம்

கையில் பணம்
இல்லையென்றால்
புத்தி சொல்லக்கூட உரிமை
இல்லாமல் போய்விடும்

ஆயிரம் உறவுகள்
நம்பிக்கையான
வார்த்தைகளைக் கூறினாலும்
மனம் ஏற்றுக் கொள்ளும்
உறவு கூறினால் மட்டுமே
அந்த வார்த்தைகளுக்கு
உயிர் இருக்கும்

சிரிக்கும் பொது
வாழ்க்கையை
ரசிக்க முடியும்
ஆனால்
துன்பத்தின்போது தான்
வாழ்க்கையை புரிந்து
கொள்ள முடியும்