எழுதப்படாமல்
விட்ட எண்ணற்ற
காவியங்களை விட
வாசிக்கப்படாமல்
வைக்கப்பட்ட
காவியங்களுக்கே
வலி அதிகம்
எழுதப்படாமல்
விட்ட எண்ணற்ற
காவியங்களை விட
வாசிக்கப்படாமல்
வைக்கப்பட்ட
காவியங்களுக்கே
வலி அதிகம்
உண்மையாக இருந்து
என்ன பயன்
கிடைப்பது எல்லாம்
தவறான பெயர்கள்
மட்டுமே
நேரத்தில் குணமடையும்
வலி இல்லாதது
உணர்வு அல்ல
பொக்கிஷங்கள்
எப்போதும் நம்மை
சுற்றியே தான் இருக்கிறது
அதை உணராமல்
நாம் தான் காலம்
கடத்தி விடுகிறோம்
வாழ்க்கை என்பது
ஒரு கடல்
நம்பிக்கை என்பது
துடுப்பாகும்
அதை பற்றிக்கொண்டு
கசப்பான நேரங்களை
கடந்து செல்ல முடியும்
நலம் விசாரிப்பதோடு
வார்த்தைகளை
முடித்துக்கொண்டால்
உறவுகள் நீடிக்கும்
நாம் தேடித் தேடி நேசித்த
ஒருவரை ஒரு நாள்
வெறுக்கலாம் ஆனால்
நம்மை தேடித் தேடி
நேசித்த ஒரு வரை ஒரு
நாளும் மறக்க முடியாது
கனவுகள் நினைத்ததாலே
நிறைவேறாது அதை அடைய
உழைத்தால்தான் வெற்றி
உன் பாதையை நோக்கி வரும்
பேசுபவர்கள்
வார்த்தைகளின் வலிமையை
உணர்கிறார்கள்
பேசாதவர்கள்
மௌனத்தின் வலிமையை
உணர்த்துகிறார்கள்
நாளைய வெற்றிக்கு
இன்றைய வலி
ஒரு பயிற்சி தான்