என்னிலடங்கும்
என் இதயத்துடிப்பில்
ஏனோ எண்ணிலடங்கா
உன் நியாபகங்கள்

தவறும் சரியாகத் தெரியும்
அதை உணராத வரையில்
உணர்ந்தும் தன்னோடே
இருக்கும் அதை
திருத்தாத வரையில்

சம்பாதிப்பவனைவிட சேமிப்பவனே சிறந்தவன்

மனதில் உள்ள
சுமைகளை யாரிடமாவது
கூறி அம்மா ஆறுதல்
தேடிக்கொள்வார்
ஆனால் அப்பா அத்தனை
சுமைகளையும் மனதிலேயே
சுமந்துக்கொண்டு எந்த சுமையும்
இல்லாததைபோல் காட்டிக்கொள்வார்

யாரை தேடி அலைகின்றது
என்று தெரியவில்லை
இந்த நிலா இரவு
முழுவதும் அலைந்து
கொண்டே இருக்கின்றது

இரவில் உறக்கம்
வருகிறதோ இல்லையோ
ஆனால் கவலையும்
கண்ணீரும் தவறாமல்
வந்து விடுகிறது

சோகங்கள் அடைமழையா
விழுந்தாலும் சரி ஆலங்கட்டி
மழையா விழுந்தாலும் சரி
சும்மா எருமமாட்டுல மழை
பேஞ்ச மாதிரி அசையாம
நிக்க கத்துக்கனும்

ஒரு மனிதனை
தாக்கும் மிகப்
பெரிய ஆயுதம்
அவர்களுக்கு பிடித்த
ஒருவரின் மௌனம்

வெற்றி பெற
எதுவும் இலக்காகாத போது
நீங்கள் புதிய வழியை
உருவாக்குங்கள்

தட்டிகொடுக்க வருவார்கள்
என்று நினைத்திருந்த வேளையிலே
தட்டிவிட்டு செல்பவர்களை
வசைபாட வார்த்தையே இல்லை