இந்த உலகம்
வதந்திகளை நம்பும் அளவிற்கு
நிஜம்
தன்னுடைய உண்மைத்தன்மையை
இழந்து விடுகிறது

விழுந்தாலும் எழுவோன்
வெற்றியைக் கையில் பிடிப்பான்

சாதிக்கும் எண்ணம்
ஆழ்மனதில் தோன்றி
விட்டால் எது இருந்தாலும்
இல்லை என்றாலும்
சாதிக்க முடியும் உன்
விடா முயற்சியால்

போலி நண்பர்களிடம் அமைதியாக
எவ்விதத்திலும் முரண்படாம
செலுத்தும் பொழுது அவர்கள்
உங்களை விட்டு தானாக விலகிடுவாங்க

எல்லா போராட்டங்களும்
நம்மை வலிமையாக ஆக்கின்றன

எப்புடி
வேணா வாழ்வங்கறதுக்கு
பேரு வாழ்க்கை இல்லை
இப்படித்தா வாழ்வங்கறதுக்கு
பேரு தான்வாழ்க்கை
தன்னம்பிக்கை
அதிகம் கொண்ட மனிதன்
தன் தேவைக்காக எதற்க்கும்
எங்கும் கைகட்டி நின்றதில்லை
முடியும் வரை போராடு
சற்று ஓய்வெடுத்து
மீண்டும் போராடு
ஏனெனில்
இந்த உலகம்
மிகப் பெரியது

தொலைந்ததற்காக அல்ல
மீண்டும் பெற
முடியாததற்காக தான்
சோகமடைகிறோம்

விழுந்த அடிகளை
படிகளாக நினைத்தால்
எந்த உயரத்தையும்
தொட்டு விடலாம்

எண்ணங்கள் பிழையானால்
சிறகு அடிக்கும்
பட்டாம் பூச்சியும்
சிலந்தி வலைக்குள்
சிக்கிக்கொள்ளும்

வெளிப்படையாக சிரித்து
பேசுபவர்களுக்கு தான்
மனதில் வெளிக்காட்ட
முடியாத பல வேதனைகள்
மறைந்திருக்கும்