பொறாமை குணத்தை
போர்வையாய்
போர்த்தி கொள்ளாதே
அது உன் மகிழ்ச்சியை
மட்டுமின்றி உன்னையே
அழித்துவிடும்

ஒரு சிங்கம் ஆடுகளின்
கருத்துகளைப் பற்றி
பொருட்படுத்துவதே இல்லை

தாழ்வு எண்ணம்
தோன்றும் போதெல்லாம்
கடந்த சாதனைகளை நினை

நேரம் எல்லாவற்றையும் மாற்றும்
ஆனால் நம்மிடம்
இருந்து போனவர்கள்
அனுபவமாகவே மாறுகிறார்கள்

சிலரின்
உண்மையான அன்பால்
தவறுகள் கூட
மன்னிக்கப்படுகிறது

கிடைக்காத ஒன்றுக்காக
நமக்கு கிடைத்த
பொக்கிஷங்களை
ஒருபோதும் தொலைத்து
விடாதீர்கள்

தெரியும் வழியை நம்பாதே
புதிய வழியை
உருவாக்க பயிற்சி செய்

வாழ்க்கை கடலென இருந்தாலும்
நம் மனம் தான்
அதன் திசைமாற்றும் கப்பல்

அவமானம் படும்போது
அவதாரம் எடு
வீழ்கின்ற போது
விஸ்வரூபம் எடு
வாதாடுவதை விட்டு
விட்டு வாழ்ந்துக் காட்டு

உனது உயரம் வலிக்குமென்றால்
பொறாமை உடையவர்
அருகில் இருக்கிறார்கள்