மகிழ்ச்சியாக
வாழ்க்கை நகரும்
போது மரணபயமும்
எட்டிப்பார்க்கும்
மரணம்
வந்துவிடக்கூடாதென்று
பேசிக்கொண்டே
இருக்கும்
உறவுகளை விட
நினைத்துக்கொண்டே
இருக்கும்
உறவுகளுக்குத் தான்
அன்பும் ஆயுளும் அதிகம்
வெறும்
அன்பை மட்டும்
பரிமாறுதல் உறவல்ல
உண்மையோடும்
நம்பிக்கையோடும்
அரவணைப்போடும்
ஒருவருக்கொருவர்
துரோகம் நினைக்காமல்
நேசங்களை
பரிமாறுவதே நல்லன்பு
ஆறாத காயங்களுக்கு
தான் அழுகை வரும்
ஆராய்ந்து பார்
நீ அறிவாய்
இறங்கும் நேரத்தில்
கிடைக்கும் ஜன்னலோர சீட்
போலத்தான் வாழ்க்கையும்
வறுமையை வென்று
முடிக்கும் போது
இளமைக்காலமும்
சேர்ந்தே முடிந்து விடுகிறது
தன் திறமையின் மீது
ஆழமான நம்பிக்கை கொண்ட
ஒருவனின் பார்வை எதிர்
உள்ளவர்களுக்குத் திமிராகத்
தோண்றுவதில் திவறில்லை
எப்படியெல்லாமோ
வாழ வேண்டும்
என ஆசைப்பட்டு
ஒரு கட்டத்தில் எப்படியாவது
வாழ்ந்தால் போதும் என்ற
மனநிலையில் தள்ளிவிடப்படுகிரோம்
வாழ்க்கை இப்படியே
இருந்து விட வேண்டும்
என்று சிலருக்கு
வாழ்க்கை இப்படியே
இருந்து விடுமோ
என்று பலருக்கு
இன்பம் மட்டும் கூட்டி
இதய இராகம் மீட்டி
எந்த நிலையின் போதும்
மாறா அன்பை
மட்டும் ஊட்டி
வாழ வேண்டும்
அன்பான இதயங்களில்
முடியும் என்ற
நம்பிக்கை தான்
வெற்றியின் முதல் படி
📖 பக்கம் 45 / 606
📋 Copied