என்ன செய்ய வேண்டும்
என்று முடிவெடுப்பது போன்றே
என்ன செய்ய கூடாது என
முடிவெடுப்பதும் முக்கியம்

இழந்த காலத்தை
மறுபடியும் அடைய முடியாது
எதிர்காலம் என்னவென்று
நம்மால் யூகிக்கவும் முடியாது
கையில் இருப்பது
நிகழ்காலம் மட்டுமே
அதை நம் வாழ்க்கைக்கு
ஏற்றவாறு
பயன்ப்படுத்தி கொள்வோம்

ஒவ்வொரு நாளும்
ஒரு புதிய வாய்ப்பு
நேற்று நடந்ததை
இன்றைக்கு கொண்டு வராதே

நாம் செய்யும்
சிறிய செயல்களும்
பெரிய மாற்றங்களை
உருவாக்கும்

சவால்களை
சந்திக்கும் மனசே
சாதனையை சந்திக்கும்

நல்லவனாய் இரு ஆனால்
அதை நிரூபிக்க முயற்சிக்காதே
அதைவிட பெரிய முட்டாள்தனம்
வேறு எதுவும் இல்லை

எல்லாத்தையும் கடந்து
செல்வதை விட
அங்கங்கே மறந்து
சொல்லுங்கள்
உடலும் மனதும்
ஆரோக்கியமாக
இருக்கும்

ஒவ்வொரு சிரிப்பின் பின்னாலும்
ஒரு அமைதியான போராட்டம் இருக்கும்

நேசிக்க யாரும்
கற்றுக் கொள்வதில்லை
ஆனால் ஒருவரை
நேசித்த பின்பு நிறைய
கற்றுக் கொள்கிறார்கள்

தடுக்கி விழும்போது
தூக்கிவிட யாரும்
வரவில்லை என்றாலும்
நிமிர்ந்து சீராக நடக்கும்போது
தடுக்கிவிட யாராவது
ஒருவராவது வருவார்கள்
(கவனம்)