நம் நினைவுகள் தான்
வாழ்க்கையின் நிழல்
எதை பார்த்தால் தெரியும்
எதை உணர்ந்தால் வாழலாம்

வாழ்க்கைல நமக்காக
யாருமே இல்லைனு
நினைக்காதீங்க
வாழ்க்கையே நமக்காகத்தானு
நெனைச்சு செமயா வாழுங்க

ஓடிக்கொண்டே இரு
எல்லைக்கோட்டை அடையாவிட்டாலும்
உன் கால்கள் உறுதிப்படும்

நல்ல ஆரோக்கியம் தான்
வாழ்க்கையின் முதன்மை செல்வம்
நம் உடல் உற்சாகமாக இருக்கும்போது
எண்ணங்களும் செயல்பாடுகளும்
ஆற்றலுடன் மலர்கின்றன
ஆரோக்கியத்தை பேணும்
நல்ல பழக்கங்கள்
தினமும் நம் கனவுகளை
நனவாக்கும் உந்துதலை
அளிக்கின்றன

முடிந்தால் செய்
முடியாவிட்டாலும் முயற்சி செய்
முடியும் வரை விடாதே

யாரும் பார்க்கவில்லை
என்று நினைத்து
குற்றங்களை
மேலும் மேலும்
செய்து கொண்டே
இருக்காதே
எங்கே சென்று
ஒளிந்தாலும்
அதன் பலனை
அனுபவித்தே தீரவேண்டும்

இன்று கடினமானதாய் தெரிந்தாலும்
நாளைய வெற்றிக்கான அடித்தளம்தான்

நாளைய வெற்றிக்காக
இன்றைய அமைதியை
விட்டுக் கொடுப்பது
தவறு இல்லை

நன்றாக பேசிக்கொண்டே
இருப்பது
மட்டும் திறமையல்ல
சில நேரங்களில் பேசாமல்
இருப்பதும் திறமையே

உன் முயற்சியின் சத்தம்
வெற்றியின் ஓசையை விட
சத்தமாக இருக்க வேண்டும்