காலம் காயங்களை ஆற்றும்

ஒரு இலட்சியத்தை
அடைய வேண்டுமென்றால்
பல அலட்சியங்களை
கடந்து சென்றாக வேண்டும்

கஷ்டங்களை தாங்கும் இதயம்
காயங்களை தாங்காது
வலிகளை தாங்கும் இதயம்
கடுமையான வார்த்தைகளை
தாங்காது ஏமாற்றத்தை
தாங்கும் இதயம்
துரோகத்தை தாங்காது

தனித்து நிற்கும் போது
தான் தெரிகிறது
தனிமை மட்டும்
தான் நிஜம் என்று

சிலரை விட்டு
விலக முடிவதில்லை
காரணம் உலகமாய் நினைத்து
வாழ்ந்து விட்டதாலும்
உயிர் கூட உடலை விட்டு
பிரிய மறுப்பதில்லை

நாம் அதிகமாக
நேசித்த ஒருவரே
நாம் அதிகமாக
வெறுக்கும் ஒருவராக
மாற்றப்படுகின்றனர்
காலத்தின்
சில விளையாட்டினால்

வாழ்க்கையின் மதிப்பு
நாம் சுவாசித்த ஆண்டுகளில் அல்ல
நாம் செய்த செயல்களில் தான்

சிரிப்பும் கண்ணீரும்
ஒரே நேரத்தில்
பகிரக்கூடிய உறவு நட்பு
வாழ்வின் அனைத்துக் குறைகளை
மறக்கும் ஓர் அரிய செல்வம்

கண்ணீர் வடிகிறது
வலி குறைக்க அல்ல
மனம் நிம்மதி பெற

தேடும் போதெல்லாம்
நாம் கிடைக்கிறோம்
என்பதால்
ஏனோ
நம்மை அடிக்கடி
தொலைக்கிறார்கள்