நிலவுக்கும் ஒரு நாள்
விடுமுறை உண்டு ஆனால்
உன் நினைவுக்கு என்றும்
விடுமுறை இல்லை

அன்பு என்பது
குறையாது என்பதற்காக
குறையில்லாமல் கொடுக்காதே
குறையாகி விடும்
குறை சொல்வதற்காகவே

துன்பம் என்பது இருட்டு போல
ஒளியை தேடி நடந்தால்
அது பின் தொடராது

தோல்வி ஒரு தடையல்ல
அது கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம்

சில தருணங்கள்
மறப்பதே இல்லை
சில நேசங்கள்
நெஞ்சை விட்டு
நீங்குவதும் இல்லை
சில விலகல்களின் காரணங்கள்
புரிவதும் இல்லை வாழ்வில்

தற்பெருமை கொண்ட
பலரின் வாழ்க்கை பயணங்கள்
வெறும் தரிசு நிலத்தையே
வருங்கால தலைமுறைக்கு
சொத்தாக விட்டு சென்று இருக்கிறது

என் பின்னாடி பேசுறவங்கள
எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஏன்னா அவங்க என் முன்னாடி
பேச பயப்படுவாங்க அந்த
பயம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

வாழ்க்கையை கணக்கில் போடாதே
அனுபவத்தில் வைத்து பொருள் காண்

வாழ்க்கையின்
அழுத்தங்களை சமாளிக்க
காமம் ஒரு வழியாக
இருக்கலாம்
ஆனால் அதில்
மூழ்கி போகாமல்
அதை நமது வாழ்வின்
ஒரு பகுதியாக
மாற்ற வேண்டும்

வயிற்றை
எளிதில் நிரப்பிவிடலாம்
ஆனால் கண்ணையும் மனதையும்
திருப்தி செய்வது மிகவும் கடினம்