வலிகள் தாங்கும் மனம் தான்
புன்னகையாய் பொலிவதற்குத் துணை

தோல்விகள் என்பது உன்னை
தூங்க வைக்க பாடும்
தாலாட்டு இல்லை
உன்னை நிமிர்ந்து நிற்க
வைக்கும் தேசிய கீதம்

மனதிற்கு பிடித்தமானவர்கள்
செய்யும் அனைத்துமே
அழகானவை தான்

வெற்றி கிடைக்கும் வரை
நீ யாருக்கும் முக்கியமல்ல
வெற்றி பெற்ற பிறகு
எல்லோரும்
உன் கதையை சொல்லுவார்கள்

வெற்றி அடைய
நினைப்பவர்கள் இருவர்
ஒருவர் அதற்காக உழைப்பவர்
மற்றொருவர் அதற்காக பொறாமைப்படுவோர்

உள்ள ஒன்னு
வச்சிக்கிட்டு
வெளிய ஒன்னு
பேசுறவங்கள விட
மனசுல பட்டத
வெளிப்படையா
பேசுறவங்கள
நூறு சதவீதம்
நம்பலாம்

சிரமம் வந்தால் நிற்காதே
அது வாழ்வின்
புதிய கதவை திறக்கிறது

ஆசை இல்லா மனம் வேண்டும்
நிம்மதியான வாழ்க்கைவாழ

புதைந்த பிறகே விதையும்
சிதைந்த பிறகே மனமும்
புதிய கோணம் காண்கிறது

சில கனவுகளை நிஜமாக
எண்ணி மகிழ்வதும்
பல நிஜங்களை கனவாக
எண்ணி மறப்பதும்
தான் வாழ்க்கை