வாழ்க்கை என்பது
கடவுளின் ஒரு கேள்வி
பதிலை நாமே எழுதுகிறோம்

ஒவ்வொன்றும் அவ்வளவு
எளிதாகிப் போவதில்லை
ஒவ்வொரு ஏமாற்றத்திற்கு
பிறகு கிடைக்கும் மாற்றம்

சில சமயங்களில்
முடிவுகளை விட
முயற்சிகள் அழகானவை

அன்பு என்பது
இருதயத்தின் மொழி
அதை பேசுவதற்கு
வார்த்தைகள் தேவையில்லை

இன்றைய சிரமம்
நாளைய வலிமையின் விதை

தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருங்கள்
தோல்வி கூட ஒரு நாள்
இவஅடங்கமாட்டானு
நம்ம கிட்ட தோற்றுவிடும்

நாம் சரியாக
இருந்தால்
கெஞ்சவோ
அஞ்சவோ
தேவையில்லை

தவறவிட்ட தருணங்களை
உணரும் நேரத்தில்
உனக்காய் இருப்பதில்லை
சில நேரங்களும்
சில உறவுகளும்

அறிந்ததை
செயல்படுத்தும் திறனே
வெற்றியின் வரலாறு

பேசுபவற்றை தவறாக புரிந்துக்
கொள்பவனிடம் மௌனமாகவும்
தவறாக பேசுவதற்காகவே
வாயைத் திறப்பவர்களிடம்
விலகியும் இருங்கள்