உண்மையாய் இருப்பது
உண்மையில்
பயனின்றி தான் போகிறது
ஆனாலும் இருக்க
விரும்புகிறேன்
எப்போதும் உண்மையாய்

வலிக்கு மொழி தேவைப்படாது
மனதின் அமைதி
எப்போதும் சத்தமில்லாத கண்ணீர்

சில நினைவுகள்
நம்மை நகைக்க வைக்கும்
சில நினைவுகள்
கண்களை கலங்க வைக்கும்

கரையும் மெழுகில்
இருளை கடந்துவிடமுடியும்
என்ற நம்பிக்கை
வாழ்க்கையிலும்
இருக்கட்டும்

சூழல்கள் மாற்றத்தால்
சூழ்நிலை மாறும்

இன்பமோ துன்பமோ
அனுபவிக்கபோவது நீ
எனவே முடிவும் உனதாகட்டும்

நான் என்பது
பல சமயங்களில்
தலைக்கனம்
சில சமயங்களில்
தன்னம்பிக்கை

மாய உலகில்
தொலைந்து போக
விரும்பவில்லை
மாறாக எதிர்த்து நிற்க
விரும்புகிறேன்
எங்கிருந்தாலும் வாழ்ந்து
தானே ஆக வேண்டும்

சிலர் காலத்திற்கு
ஏற்றார் போல்
மாற்றி கொள்வது
உடைகளை மட்டுமல்ல
உண்மையானவர்களிடம்
நடிக்கும் நடிப்பையும் தான்

உலக வரலாற்றைப்
படிப்பதை விட
உலகில் வரலாறு
படைப்பதே இனிமை